ஈரான் போர் அடுத்தடுத்து பாசிட்டிவ் நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. “அமெரிக்கா எங்களின் 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் போர் விரைவில் முடியும். ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும்” என்று ஈரான் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கடந்த வார இறுதியில் வந்தது. நேற்று இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும் என்று வேறு ஈரான் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகிறது. போர் முடிந்துவிடும். ஹார்முஸ் திறக்கப்பட்டுவிடும் போன்ற வார்த்தைகள் எப்போதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொல்வார். ஆனால், இந்த முறை ஈரானிடமிருந்து வந்திருக்கிறது என்பதே நல்ல முன்னேற்றம்தான். ஹார்முஸ் நீர்ச்சந்திஉக்ரைன் போர்: 'ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் வடகொரியத் தொழிலாளர்கள்' - இருநாடுகளுக்கும் என்ன பலன்? அமெரிக்காவில் ஈரான் அதிபர் தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்குக்குச் சென்றிருக்கிறார். எந்த நாட்டுடன் போர் நடக்கிறதோ, அதே நாட்டிற்கு எதிர்தரப்பு அதிபர் சென்றிருப்பது உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. ட்ரம்ப் பேச்சு நேற்று (செப்டம்பர் 22) ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “நான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர்கள் மீண்டும் தங்களைச் சீரமைத்துக்கொண்டு, மத்திய கிழக்கிலோ. ஏன் உலகிலேயே கூட மிகச் சிறந்த ஒரு நாடாக உருவெடுக்க வழிவகுப்பதா? அல்லது ஈரானிய இஸ்லாமியக் குடியரசை உடனடியாக அழித்து, இனி யாரையாவதையோ அல்லது நாட்டையோ அவர்கள் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார். கூடவே, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட்-டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும் கூறியிருந்தார். நல்ல முறையில். முன்பே சொன்ன மாதிரி, ஐ.நா. பொதுக்கூட்டத்திற்கு ஈரான் அமெரிக்கா சென்றிருக்கிறது. ஈரான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் மூன்று மணிநேரம் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இப்போதைய சூழலில் பார்த்தால், ஈரான் போர் நிறுத்தம் பாசிட்டிவ் ரூட் எடுத்திருக்கிறது போலும்! 'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/trump-reveals-three-hour-us-iran-talks-in-new-york




