தூத்துக்குடி, தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.22,970 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.22 ஆயிரத்து 970 பறிமுதல் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திலுள்ள சிவில் சப்ளை (வட்ட வழங்கல்) பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்களோ அல்லது கணக்கோ இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.22,970-ஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாலுகா அலுவலகச் சிவில் சப்ளை பிரிவு ஊழியரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அரசு அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-department-raids-thoothukudi-taluka-office-rs22970-seized




