சென்னை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, கவர்னர் அர்லேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்வதும், பின்னர் ஆளும் கட்சியில் இணைவதும் ஒரு தொடர் கதையாகி வருகிறது. இதுவரை 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனை குதிரை பேரமாக கருத வேண்டும். ராஜினாமா செய்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் கவர்னராகிய நீங்கள் தலையிட்டு, அவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும்.மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உங்களுக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். சாதிவாரி மககள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னதாகவே, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுவதற்கான பரிந்துரைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/explanation-must-be-sought-from-mlas-who-are-resigning-krishnasamys-letter-to-the-governor




