கோவை, கடந்த சில நாட்களாக இவருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சிலிண்டர் சேவை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்த 1 ரூபாய் இட்லி பாட்டி. கமலாத்தாள் கோவை வடவள்ளி அருகே உள்ள வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்காக வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து நாடு முழுவதும் பெரும் புகழ்பெற்றவர். இவரது சேவையை பாராட்டி பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கி வந்தனர். இலவச சிலிண்டர் நிறுத்தம் இவரது சமையல் தேவையை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சிலிண்டர் சேவை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாழ்வாதாரம் இதனால் அதிர்ச்சி அடைந்த இட்லி பாட்டி, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் விறகு அடுப்பை பயன்படுத்தி 1 ரூபாய்க்கு இட்லி சுட்டு விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளானார். மேலும், இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. கலெக்டரிடம் மனு இதனை தொடர்ந்து, இட்லி பாட்டி கமலாத்தாள் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அங்கு அதிகாரிகளை சந்தித்து அவர் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், ஏழை மக்களுக்கு 1 ரூபாய்க்கு இட்லி வழங்கும் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எனக்கு மீண்டும் இலவச சிலிண்டர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. வயோதிக நிலையிலும் லாப நோக்கமின்றி ஏழைகளின் பசி போக்கி வரும் இட்லி பாட்டியின் இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/covai-collector-office-1-rupee-idli-grandma-free-gas-cut




