சென்னை, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, திருச்செந்தூரில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 91-வது பிறந்த நாள் பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த 'தினத்தந்தி' அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நாடார் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள் மாலைமலர் அலுவலகத்திலும் மரியாதை சென்னை வேப்பேரியில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நாடார் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல், தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல், தந்தி ஒன் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/91st-birthday-c-balasubramanian-adithan-pays-tribute-at-the-sivanthi-adithanar-memorial-hall




