துபாய், 8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவி லும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறு திக்கு தகுதி பெறும்.'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந் திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தி யாசத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது. இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந் திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தா னுடன் இன்று (சனிக்கிழமை) கோதாவில் குதிக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-pakistan-elects-to-bat-against-india




