செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் காரில் கொண்டு சென்ற ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்தனர். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக, தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த அன்சர் அலி என்பவர், காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவரது காரை மடக்கி சோதனை செய்தனர். ரூ.4½ லட்சம் பறிமுதல் சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4½ லட்சம் எடுத்துச்சென்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள், ரூ.4½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுராந்தகம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-constituency-by-election-rs-45-lakh-seized-from-a-car




