சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இதனையடுத்து, நேற்றும் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,205-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dipped-slightly-what-is-the-situation-today




