சென்னை பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நுழைவுத் தேர்வு தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளன. விருப்பக் கோரிக்கை மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு உதவிகள், கலந்தாய்வு ஆதரவு மற்றும் கல்லூரி சேர்க்கைக்குப் பிந்தைய ஒருங்கிணைப்புப் பணிகளும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக வழங்கப்படவுள்ளன. இந்த விருப்பக் கோரிக்கையானது (EoI), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: பரத் (7200738258) / யுரேகா (7373944312) / கார்த்திகேயன் (7338801434). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/entrance-exam-training-for-students-studying-in-tribal-welfare-schools




