நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி மாணவர்கள் போராட்டம் இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நீட் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "நீட் தேர்வு மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது: (1) சுமையைக் குறைத்தல், (2) வணிகமயமாக்கலை ஒழித்தல், மற்றும் (3) தரத்தை மேம்படுத்துதல். ISRO: இஸ்ரோவில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் விஞ்ஞானிகள்; காரணம் என்ன? இவற்றில் ஒவ்வொன்றிலும் நீட் தோல்வியடைந்துள்ளது. அது கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மையங்களுக்கு மட்டுமே மாற்றியுள்ளது. நீட் தேர்வின் பிரச்னை எப்போதும் கட்டமைப்பு சார்ந்ததே தவிர, வெறும் நடைமுறை சார்ந்தது மட்டுமே அல்ல. சமீபத்திய நிகழ்வுகள் அந்த கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் ஒன்றிய அரசுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது" என்று பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/dmk-leader-stalin-about-neet-ban




