புதுடெல்லி, 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட 7 பந்தயங்களை உள்ளடக்கிய ஹெப் டத்தானில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங் கனை என்ற சாதனை படைத்தவர் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 29 வயதான ஸ்வப்னாவிடம் நடத்தப் பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப் பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. இரு கால்களிலும் 6 விரல்களுடன் கவனத்தை ஈர்த்த ஸ்வப்னா, இந்த மாத தொடக்கத்தில் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/female-athlete-caught-in-a-doping-test




