சென்னை, தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் ‘ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி’ இன்று காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், நாட்டு நலப்பணித் திட்டம், NDSO மற்றும் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:- * நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்துதல். * அரசு காலியிடங்களில் பனை விதைகளை நடுதல். * கடற்கரை மண் அரிப்பைத் தடுத்தல். * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல். * பனை சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல். * பனை சார்ந்த தொழில்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல். தமிழ்நாடு முழுவதும் நீலகிரி மாவட்டம் நீங்கலாக 37 மாவட்டங்களில் ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று, மொத்தம் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யும் வகையில் இப்பணி முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் 100 கல்லூரிகளில் பனை விதை வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட பனை விதைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளின் கரைகள் உள்ளிட்ட பொருத்தமான இடங்களில் நடவு செய்யப்பட உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/statewide-initiative-to-plant-10-million-palm-seeds-in-tamil-nadu-minister-anand-inaugurates-the-drive




