திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கிறது 94 கரியமாணிக்கம். தினமும் கொத்து கொத்தாக 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் 94 கரியமாணிக்கம் கிராமத்திற்குள் சுற்றி வருவதாகவும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களைத் தின்று சேதப்படுத்துவதாகவும், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், குரங்குகள் தொல்லையால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தையொட்டி சிறுகனூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்குகள், மான்கள், காட்டுபன்றி மற்றும் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. monkey இதையடுத்து, அவை உணவுக்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள சணமங்கலம், பெரகம்பி, 94 கரியமாணிக்கம், சமயபுரம் மற்றும் எதுமலை போன்ற கிராமப்பகுதிகளுக்கு வருவதாகவும், குரங்குகளின் சேட்டைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் வாசிக்கிறார்கள். இதில் குறிப்பாக, 94 கரியமாணிக்கத்தில் குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, கிராமத்தைச் சுற்றிலும் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் மற்றும் காய்களைக் கடித்து நாசம் செய்து விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிகின்றனர். இதுதொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், "பல முறை வனத்துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட அலுவலகத்தில் நேரில் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது கிராம மக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் கையில் பொருட்களை எடுத்துசெல்லும் போது உணவு பொருட்களைப் பிடுங்கி விடுகின்றன. அதோடு, பள்ளி மாணவ மாணவிகளை விரட்டி கடிக்க வருகின்றன. monkey அதேபோல், வீடுகளில் உடைகளை, உணவுகளை மற்றும் வெளியில் உலரவிடும் சந்தர்ப்பத்தில் குரங்குகள் அவற்றை கொண்டுசெல்வதால் சிரமப்பட்டு வருகிறோம். வனத்துறையிடம் புகார் கொடுத்தால், 'நாங்கள் குரங்குகளைப் பிடித்துவிட்டோம். இனிமேல் குரங்குகளைப் பிடிக்க வேண்டுமென்றால், ஒரு குரங்கு பிடித்தால் ரூ. 100 தர வேண்டும்' என்று பேரம் பேசி, எங்களை நோகடிக்க வைக்கிறார்கள். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அல்லது முதலமைச்சர் இந்தக் கிராம மக்கள் நலன் கருதி தனி கவனம் செலுத்தி குரங்குகள் அட்டகாசத்தைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/trichy-snatching-food-and-tearing-off-roofs-villagers-in-distress-due-to-monkey-menace




