ஐபிஎல் என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று மட்டுமே ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, `ஹம்சா’, `துரந்தர்’ என எந்த வீடியோவை இவர்கள் இன்று வெளியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கவைத்திருக்கிறது `லுங்கி பாய்ஸ்’ அணியினரின் வீடியோ. நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்ற எளிமையான விஷயங்களைத் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள். இயல்பான நடிப்பு, நையாண்டி, வித்தியாசமான கதை சொல்லல் எனத் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துவரும் இவர்களுக்கு `Most Celebrated Channel of the Year’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நடிகர் அருண் விஜய் வழங்கினார். தொடர்ந்து பேசிய `லுங்கி பாய்ஸ்’ அணியினர், ``முதல்ல எல்லாருக்கும் வணக்கம். அடுத்து, அருண் விஜய் சாருக்கும் ரொம்ப நன்றி. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு வீடியோ போட்டேன். உடனே அவர் பணம் போட்டு விட்டுட்டார். நாங்க சாதாரணமா பேசுறதைத்தான் கன்டென்ட்டா மாத்துறோம். அதுல இருந்து வர்றதுதான் இந்த குஜிலிமஸ்து, சாக்ஷி எல்லாம். ஐபிஎல் பார்க்காதவங்ககூட, ‘உங்க வீடியோவைப் பார்த்து பார்க்க ஆரம்பிச்சிட்டோம்’னு போன் பண்ணிச் சொல்றாங்க. ஐபிஎல் முடிஞ்சதுக்கப்புறம் ஃபுட்பால் பத்தின வீடியோ போடலாம்னு நினைச்சோம். ஆனா, அதைப் பத்தி எங்களுக்கு ஒண்ணுமே தெரியலை. ஆனாலும் வீடியோ போட்டோம்" என்று பேசியிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/lungi-boys-team-speech-at-vikatan-digital-awards-2026




