சேலம், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கயிறு அறுந்ததால் கீழே விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பள்ளி விழா சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். விறுவிறுப்பான போட்டி விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் ஆர்வமுடன் களம் இறங்கினார். திடீரென அறுந்த கயிறு இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் திரட்டி, வெற்றிக்காக விறுவிறுப்பாக கயிறை இழுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் கயிறு நடுவே சட்டென்று அறுந்தது. பதறிய அதிகாரிகள் கயிறு அறுந்த வேகத்தில் நிலைதடுமாறிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் கயிறு பிடித்து இழுத்த 15-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் கீழே விழுந்தனர். அமைச்சர் திடீரென கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்களும், அதிகாரிகளும் பதறியடித்து கொண்டு ஓடிவந்து அமைச்சரை உடனடியாக பத்திரமாகத் தூக்கி விட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tug-of-war-rope-snaps-minister-falls-at-school-event




