திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. முதலில் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை 9 நாட் கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவும், அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக் கிறது. இந்த இரு பிரம்மோற்சவ விழாக்களின்போது கோவிலில் நடக்கும் பூஜைகள், வாகனச் சேவைகள் உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல் விவரங்கள் அச்சிடப் பட்ட கையேடுகள் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று திருமலையில் உள்ள அன் னமய பவனில் நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் முத்தாடா.ரவிச்சந்திரா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கையேட்டை வெளியிட்டனர். இரு பிரம்மோற்சவ விழா காலத்தில் நடக்கும் பல்வேறு வாகனச் சேவைகள், சிறப்பு சடங்குகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கையேட்டில் பக்தர்களின் பயன்பாட்டுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/two-brahmotsavam-festivals-in-tirupati-this-year-festival-handbook-released




