பெற்றோரின் பாராட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்று நடிகர் ரவி மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். பேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’, கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது, படத்தின் புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர். ஆனால், அண்மையில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதையடுத்து ரவி மோகன் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது” என தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அத்துடன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜெயம் ரவிக்கு பிள்ளைகளை பார்க்க அனுமதி அளித்தும், அவர் மாதம் 3 லட்சம் ரூபாய் ஆர்த்தி ரவிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பெற்றோரின் பாராட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்று நடிகர் ரவி மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “"நேற்று இரவு என் குடும்பத்தினருக்காக, நான் இயக்குநராக அறிமுகமாகும் 'An Ordinary Man' திரைப்படத்தின் சில காட்சிகளையும் அதன் இசையையும் காட்டினேன். என் குடும்பத்தினர் குறிப்பாக என் அப்பா எனக்காக உற்சாகமாக கைதட்டிய அந்த தருணம், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று நான் மனதார பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/every-child-deserves-to-receive-appreciation-from-their-parents-actor-ravi-mohan




