டெல்லிக்குப் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா? காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி டெல்லிக்குப் போராடச் சென்ற தமிழக விவசாயிகளைத் தடுத்து நிறுத்தவும், அவர்களைத் திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது? கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரைக் கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போகின. இந்த நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரைக் கொண்டுவந்ததைப் போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளைப் பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பிக் கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. டிடிவி தினகரன் எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தைக் கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். "காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, ஒன்றிணைக்கட்டும்!" - விஜய்க்கு கர்நாடகா பாஜக சமாதான கடிதம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/maharashtra-government-turned-back-tn-farmers-on-their-way-to-stage-protest-in-delhi




