சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- "மனதின் குரல்" இன்றைய "மனதின் குரல்" நிகழ்ச்சியின் 136-ஆவது அத்தியாயத்தில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கார்கில் விஜய் திவாஸ் நன்னாளில், நாட்டின் எல்லையைக் காக்க வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, 'சௌர்யா விஜய் யாத்திரை' குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டதையும், பினாகா ராக்கெட் மற்றும் குஷா ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் தற்சார்பு பாரதத்தின் உயரிய வலிமைக்குச் சான்றுகளாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத் துறையில் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டம் வென்றதையும், லார்ட்ஸ் மைதானத்தில் நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றதையும், விண்வெளித் துறையில் 'விக்ரம்-1' ராக்கெட்டின் வெற்றியையும் மற்றும் சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் நமது மாணவர்கள் பெற்ற பதக்கங்களையும் பாராட்டிய பிரதமர், நாட்டின் இளைய சமுதாயத்தின் திறமையையும் அறிவாற்றலையும் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி வேண்டுகோள் இறுதியாக, ஜூலை 27 அன்று பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உன்னத ஆசிரியர் பணியைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி, நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி 'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga) இயக்கத்தை மக்கள் அனைவரும் மாபெரும் வெற்றியாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாமும் பெருமையுடன் தேசக் கடமையை ஆற்றுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/today-s-mann-ki-baat-celebrated-self-reliance-and-patriotism-nainar-nagendran




