சென்னை, தமிழகத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின், வாட்ஸ்அப் எண் மூலம் புகார் அளிக்கலாம், அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்து உத்தரவிட்டுள்ளது. நெல் கொள்முதல் நடப்பு கொள்முதல் பருவம் 2026–2027–ற்கு மத்திய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 01.09.2026 முதல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு 03.09.2026 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகள் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை 15.09.2026 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 1.17 லட்சம் மெ.டன் நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750/- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600/- க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண். 9500801465 மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும் போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதை பற்றியோ புகார் தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய வாட்ஸ்அப் எண். 9500801465-ல்” புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaints-can-be-filed-via-whatsapp-number-if-there-are-deficiencies-in-procurement-centers-tamil-nadu-government-announcement




