சண்டிகர் முன்னாள் உலக மல்யுத்த சாம்பியனும், பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ ரெஸ்லருமான 'தி கிரேட் காளி' அரியானா மாநிலத்தில் ஒரு சிறிய கார் விபத்தில் சிக்கினார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பகுதி நொறுங்கியது அரியானாவின் கர்னால் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி 'தி கிரேட் காளி' தனது எச்.யு.வி ரக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த காளியின் கார் அதன் பின்புறம் பலமாக மோதியது. இந்த மோதலில் காளியின் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காயமின்றி தப்பினார் விபத்தின் வீரியம் அதிகமாக இருந்தாலும், காரில் இருந்த மல்யுத்த வீரன் 'தி கிரேட் காளி' எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் சுங்கச்சாவடியில் இருந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. பெரிதுபடுத்த விரும்பவில்லை விபத்து தொடர்பான செய்திகள் பரவி ரசிகர்களை கவலையடைய செய்த நிலையில், தி கிரேட் காளி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.அதில், "இது ஒரு சிறிய விபத்து தான்; இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. உங்களது அன்பிற்கு நன்றி" என்று குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காளி பாதுகாப்பாக இருப்பதை அறிந்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/haryana-the-great-khali-involved-in-a-car-accident




