சென்னை, சென்னை துறைமுகத்தில் இருந்து ஒரே நாளில் 14,778 டன் வார்ப்பு இரும்புக் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “கடந்த செப்டம்பர் 14-ந்தேதி சென்னைத் துறைமுகத்தில் ஜவஹர் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.வி. சுப்ரா மோனார்க்' என்ற சரக்குக் கப்பல் மூலம் வார்ப்பு இரும்பு கட்டிகளை ஏற்றும் பணி நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த ஜூலை 30-ந்தேதி 'எம்.வி. அகியா சாரிஸ்' என்ற கப்பல் மூலம் 13,208 டன் வார்ப்பு இரும்பு கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு காரணமாக இருந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சென்னை துறைமுக தலைவர் சச்சின் எஸ்.குர்வே பாராட்டு தெரிவித்தார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-record-at-chennai-port-14778-tonnes-of-iron-ingots-exported-in-a-single-day




