சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பகுதியில் அமைந்துள்ள 3,825 அடி உயரமுள்ள கொண்டரங்கி மலையைத் தொடர்ந்து 1,000 நாட்கள் ஏறி, நேற்று (ஜூலை 15) தனது அரிய சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தம்பி திரு. தீபக் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இளைஞர்கள் சிலர் போதை போன்ற தவறான பாதைகளில் செல்லும் சூழலில், அதற்கு நேர்மாறாக ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் உடற்தகுதியைத் தனது பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளார் தம்பி தீபக் அவர்கள். அவரது இந்த அயராத அர்ப்பணிப்பு இளைய சமுதாயத்திற்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாகும். நமது நாட்டின் இளைய தலைமுறையினர், தம்பி தீபக் அவர்கள் போன்ற சாதனையாளர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேணி, தங்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்த வேண்டும். விடாமுயற்சியால் இமாலய இலக்கை எட்டியுள்ள தம்பி தீபக் அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறக்க வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-climbs-3825-ft-mountain-for-1000-consecutive-days-nayanar-nagendran-praised




