தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு, நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் ஜீப்பில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், ஏரியின் உள்ளே ஜீப்பை நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த இருவரும் ஜீப்பிலேயே தூங்கி உள்ளனர். இந்நிலையில், அவர்கள் எதிர்பாராத வகையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, ஜீப் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தூக்கம் கலைந்து எழுந்த 2 வாலிபர்களும் ஜீப் தண்ணீரில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், அப்பகுதி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து கயிறு கட்டி, நீரில் மூழ்கியிருந்த ஜீப்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் இருந்து வெளியே மீட்டுள்ளனர். நீரில் மூழ்கிய ஜீப்பை பொதுமக்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/drunk-people-who-parked-their-jeep-in-the-lake-are-floating-in-the-water




