பண்டைய காலந்தொட்டு இன்றளவும் பண்டமாற்று முறை உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் வங்கி கணக்குகளில் போட்டு வைத்து இருக்கும் பணத்தை 'செக்' மூலம் பரிமாற்றம் செய்யும் முறை வந்தது. அதன்பின் கார்டுகள் வந்தன. இதன்மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்ய நெட் பேங்கிங் வசதிகள் வந்தன. இவை எல்லாவற்றையும் விட மிக எளிதாக பண பரிமாற்றத்துக்கு தேசிய பணப்பரிமாற்ற கழகத்தின் யு.பி.ஐ. வந்திருக்கிறது. இதன்மூலம் இருந்த இடத்தில் இருந்தே கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு செல்போன் மூலம் பணம் அனுப்பிவிடமுடியும். தற்போது சாலையோர கடை முதல் பெரிய மால்கள் வரை பெரும்பாலும் யு.பி.ஐ. மூலமே நிதி பரிமாற்றம் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/others/thalayangam/tamil-nadu-in-bhim-app-usage




