சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160-ம், கிராமுக்கு ரூ.20-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-today-whats-the-status




