சென்னை, வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிக மழை தரும் காலமாக வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்த பருவமழை காலத்தின் புயலால் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆண்டுதோறும் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-chief-minister-vijay-consultation




