சென்னை, விருது விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரவி மோகனின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது, படத்தின் புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர். ஆனால், அண்மையில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதையடுத்து ரவி மோகன் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது” என தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அத்துடன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விருது வழங்கும் விழாவில் பேசிய ரவி மோகன், “எனக்கு 46 வயதாகிவிட்டது. அதில் 23 வருடம், என் வாழ்வில் பாதி வருடம் நான் சினிமாவில் இருந்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது, நான் செய்த சிறிய தவறு உங்களை காயப்படுத்தி இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் 50-50 சதவீதமாக இருக்கும்போது, நான் கொஞ்சம் எமோஷனலாகிவிட்டேன். அதன் பிறகு நீங்கள் கொடுத்த அன்பும், சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருவரும், ‘சினிமாவில் இருக்கமாட்டேன் என்பதை மட்டும் நீ சொல்ல கூடாது’ என்றார்கள். அவர்கள் கூறியதை நான் வேதவாக்காக எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவர் முன்னிலையிலும், மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சினிமாவுக்கும், உங்களுக்கும், என்னை விரும்பும் ரசிகர்களுக்கும் நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். திரும்பி வருவேன். திரும்பி வந்துக் கொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி. நான் வெளிப்படையாக பேசியதில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. நிறைய பேர் மனநலன் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் உங்களால் நானும் பேசுகிறேன் என சொல்வதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நான் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் ரசிகர்கள்தான். நீங்கள் விரும்பிய குமரனாக, துருவனாக, தனி ஒருவனாக, பொன்னியின் செல்வனாக, ‘கராத்தே பாபு’வாக கண்டிப்பாக நான் திரும்பி வருவேன். இனிமேல் தவறு நடக்காது. உங்கள் ஆசிர்வாதத்தால் என் புது வாழ்க்கை தொடரும்” என்று பேசியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-will-not-betray-cinema-and-my-fans-actor-ravi-mohan




