ஆம்ஸ்டெல்வின், 16 அணிகள் பங்கேற்கும் 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடங்குகிறது. வருகிற 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகள் பெல்ஜியத்தின் வாவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வின் நகரங்களில் நடைபெறுகின்றன. 4 பிரிவுகளில் 16 அணிகள் போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகளும், ‘பி’ பிரிவில் பெல்ஜியம், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன. ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வேல்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஒரே பிரிவில் ‘டி’ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளதால், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் உலகக் கோப்பையும் தொடக்கம் ஆண்கள் உலகக் கோப்பை நடைபெறும் அதே பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டியும் இன்று தொடங்குகிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஒரே இடத்தில் இணைந்து நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் பிரிவிலும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘டி’ பிரிவில் சீனா, இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-begins-today-india-and-pakistan-in-the-same-group




