சென்னை, தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திடீர் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து… — CTR. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-sudden-power-cuts-in-tamil-nadu-minister-nirmal-kumar-explains



