திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். நடிகை ஸ்ரீலீலா இதனிடையே, தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகை ஸ்ரீலீலா. இவர் தெலுங்கில் பகவந்த் கேசரி, புஷ்பா 2, ஜுனியர் 2 உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் பராசக்தி படத்திலும் இவர் நடித்துள்ளார். ஸ்ரீலீலா தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ஓம்- சப்டர் 1: உதிரம் படத்திலும் நடித்து வருகிறார். அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்த பரதநாட்டிய குழுவினருடன், பொதுமக்களுடன் நடிகை ஸ்ரீலீலா போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-sreeleela-darshan-arunachaleswarar-temple




