சென்னை, சென்னையில் இளம்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் அறிமுகமான வாலிபர் சென்னை ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 20) என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். 2 பேரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணேஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல்; வாலிபர் கைது இந்த நிலையில், அந்தப் பெண்ணை சந்தித்து பேச வேண்டும் என கணேஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அந்த பெண் சென்றார். அங்கு கணேஷ், தன்னுடன் தொடர்ந்து பேசிப் பழக வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-assaulting-a-young-woman-and-issuing-death-threats




