போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 194 / 3 இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கவெம் ஹட்ஜ் அதிகபட்சமாக 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/west-indies-vs-pakistan-1st-test-1st-innings




