சென்னை, தங்கம் விலை தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து 'டாப்' கியரில் எகிறி வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,985-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விலை நிலவரம் இந்த நிலையில், 4 நாட்கள் தொடர் ஏற்றத்துக்கு பிறகு தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dipped-slightlywhat-is-the-situation-today




