சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25-ந்தேதி (நாளை) காலை 9.30 மணியளவில் பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-to-stage-protest-in-palani-tomorrow-condemning-the-tvk-government




