Doctor Vikatan: என் மகனுக்கு 23 வயதாகிறது. அவன் வாரத்துக்கு 3-4 நாள்கள் ஷவர்மா சாப்பிடுகிறான். இது அவனது ஆரோக்கியத்தை பாதிக்குமா. வெஜிட்டேரியன் ஷவர்மா சாப்பிடலாம், அது ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள் சிலர். அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா. ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நமக்கு அறிமுகமான ஓர் உணவு. கோதுமை அல்லது மைதாவில் தயாரித்த ரோலில் நிறைய காய்கறிகள், சிக்கன், மட்டன், கொண்டைக்கடலையை அரைத்துச் செய்யப்படுகிற ஹம்மஸ் ஆகியவை சேர்த்துச் செய்யப்படுகிற உணவு. ஷவர்மா சாப்பிடுவோர் அது ஆரோக்கியமானதா, சுத்தமாகத் தயாரிக்கப்படுவதா என இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், சிக்கன், மட்டன் மற்றும் புரதச்சத்து நிறைந்த ஹம்மஸ் என எல்லாம் சேர்வதால் அங்கெல்லாம் ஷவர்மா என்பது ஆரோக்கியமான உணவாகவே இருந்தது. ஆனால், நம்மூரில் விற்கப்படும் ஷவர்மா அப்படியில்லை. இங்கே அதில் மயோனைஸ்தான் பிரதானமாகச் சேர்க்கப்படுகிறது. ஷவர்மா கடைகளில் அதைச் சமைக்கும்போது வெளிப்புறம் மட்டுமே வெந்து, உள்ளே அசைவ உணவுகள் அப்படியே வேகாமல் இருப்பதை கவனிக்கலாம். அதாவது முழுமையாகச் சமைக்கப்படாத உணவாகவே இருக்கும். விற்காத ஷவர்மாவை மீண்டும் மீண்டும் பதப்படுத்தி, அடுத்தடுத்த நாள்களில் பயன்படுத்துவார்கள். அசைவ உணவுகளை முறையாகப் பதப்படுத்தி, குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்காவிட்டால் அவை ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும். இ கோலை, சால்மனெல்லா போன்ற பாக்டீரியா கிருமிகளை உருவாக்கி, ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம். ஷவர்மா சாப்பிட நினைத்தால் முதலில் அந்தக் கடையின் சுகாதாரத்தை கவனியுங்கள். ஷவர்மா சாப்பிட நினைத்தால் முதலில் அந்தக் கடையின் சுகாதாரத்தை கவனியுங்கள். தினமும் எவ்வளவு தயாரிக்கிறார்கள், எவ்வளவு விற்பனையாகிறது என்று பாருங்கள். திறந்தவெளியில் வைத்துச் சமைக்கும் கடைகளைத் தவிருங்கள். சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டாலும் ஷவர்மாவை மாதத்தில் ஒருநாள் சாப்பிட்டால் பிரச்னையில்லை. சிலர் வெஜிடேரியன் ஷவர்மா நல்லது என்ற எண்ணத்தில் அதைச் சாப்பிடுகிறார்கள். அதிலும் மயோனைஸ், தரமற்ற பனீர், சுத்தம் செய்யப்படாத முட்டைகோஸ் போன்றவையே பிரதானமாக இருக்கும். அடிக்கடி ஷவர்மா சாப்பிட்டால் உடல் எடை கூடும். பெண்களுக்கு பீரியட்ஸ் தொடர்பான பிரச்னைகள் வரலாம். செரிமானம் பாதிக்கப்படலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/health/is-vegetarian-shawarma-healthy




