சென்னை, திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஓணம் திருநாள் ஆளப்பட்ட மக்கள் மீது எல்லையில்லா அன்பு காட்டிய மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும் மலையாள சொந்தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் வள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. மகாபலி வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை மகாபலி காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மண்ணுக்குள் மறைந்தாலும் தமது மக்களின் மீது கொண்ட அன்பை மறைக்காத மகாபலியை போன்ற ஆட்சியாளர்கள் கிடைத்தால் அது மக்களின் வரம். அந்த வரம் வாய்க்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் சில ஆண்டுகளில் நிறைவேறும் என்பது உறுதி. வாழ்த்து ஓணம் திருநாளைக் கொண்டாடும் மக்கள், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, வளம், சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி, மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-love-virtue-peace-and-social-justice-flourish-on-onam-anbumani




