காந்தி நகர், குஜராத்தில் மகளை கொன்று உடலை பிரிட்ஜில் வைத்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரிலி மாவட்டத்தை சேர்ந்தவர் கிஷோர் தனுக் (வயது 40). கட்டுமான மேற்பார்வையாளராக ( construction site supervisor) பணியாற்றி வந்த இருவருக்கு மஞ்சுபின் என்ற மனைவியும், 5 வயதில் ஹிமன்ஷி என்ற மகளும் இருந்தனர். மகளை கொன்று தந்தை தற்கொலை இந்நிலையில், மஞ்சுபின் கடந்த புதன்கிழமை மகளை கணவரிடம் விட்டு விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அன்று இரவு கணவர் கிஷோருக்கு மஞ்சுபின் செல்போனில் கால் செய்துள்ளார். ஆனால், கிஷோர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து மறுநாள் காலை மஞ்சுபின் தனது சகோதரனை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற மஞ்சுபின் சகோதரர் வீட்டில் உள்ள அறையில் கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கிஷோரின் மகள் ஹிமன்ஷி வீட்டில் உள்ள பிரிட்ஜில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிஷோர் எழுதி வைத்த 3 கடிதங்களை கைப்பற்றினர். கடிதங்கள் அந்த கடிதங்களில் தனக்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும், தொழில் ரீதியாக கூட்டாளிகளுக்கு கொடுத்த பணத்தை அவர்கள் திருப்பி தராததாலும் தற்கொலை செயவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் உயிரிழந்தபிறகு தனது மகள் வாழ்வது சிரமமாக இருக்கும் என்பதால் மகளையும் கொலை செய்துவிட்டு உடலை பிரிட்ஜில் வைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதங்களை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கொலை செய்வதற்குமுன்பு அவருக்கு புதுத்துணி உடுத்தி பிறந்தநாள் கொண்டாடுவதுபோல் அறையில் பலூன்களை கட்டுதல் உள்ளிட்ட அலங்காரங்களையும் கிஷோர் செய்துள்ளார். மகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tragedy-in-gujarat-father-kills-daughter-keeps-body-in-fridge-before-suicide




