வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 42) மற்றும் இவரின் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடியில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இவர்களின் பானிபூரி கடைக்கு வந்த சில இளைஞர்கள், "இது எங்க ஏரியா. இங்க கடைக்கு வைக்கணும்னா எங்ககிட்ட பர்மிஷன் வாங்கணும். இருந்தாலும் கேட்காம கடை வச்சிட்டீங்க. 500 ரூபாய் மாமூல் கொடுங்க" என்று மிரட்டியதோடு, தகாத சொற்களாலும் திட்டி கடைக்காரர்களைத் தாக்கியிருக்கிறார்கள். பானிபூரி கடைகளில் மிரட்டிய இளைஞர்கள் இதுதொடர்பாக, கடை வியாபாரி சங்கரின் மாமியார் காசியம்மாள் காட்பாடி காவல் நிலையம் சென்று புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேரை அடையாளம் கண்டுபிடித்தனர். விசாரணையில், காட்பாடி கே.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்த எபி என்கிற ராகுல் (21), குமரப்பா நகரைச் சேர்ந்த சந்தோஷ் (25), காட்பாடியைச் சேர்ந்த மணி (22), செங்குட்டையைச் சேர்ந்த ஆகாஷ் (26) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு: மாமியாரைக் கொலை செய்த மருமகள் - சிக்கியது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/4-people-arrested-for-demanding-rs-500-from-pani-puri-shops-in-katpadi




