ராமநாதபுரம், வருகிற 27-ந்தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில் தனுஷ்கோடியில் கடல்கள் சங்க மிக்கும் இடத்தில் 1000 நடனக்கலைஞர்கள் மூலம் நாட்டியாஞ்சலி விழிப்புணர்வு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு வருகிற 27-ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-tourists-visiting-dhanushkodi-on-the-27th




