வண்டலூர், விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தி னம் இரவு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக தமிழக அரசு சார்பில் 1,250 சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன. இந்த நிலையில் தேனிக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் பயணிகள் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர்களது செல்போன்களுக்கு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதற்கு பதிலாக இரவு நேரத்தில் இயக்கப்படும் வேறு பஸ்சில் பயணம் செய்யு மாறு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலை யத்தில் இருந்த போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். கடைசி நேரத்தில் டிக் கெட்டை ரத்து செய்துவிட்டு, வேறு பஸ்சில் செல்லுமாறு கூறுவது எப்படி? குறிப்பிட்ட நேரத்தில் தேனிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தோம்" என்று பயணிகள் ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் தேனி செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள் ளானார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-suffer-as-government-bus-tickets-booked-a-month-ago-are-cancelled




