தூத்துக்குடி, தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவன மேலாளரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் ரூ.75.2 லட்சம் சுருட்டிய தூத்துக்குடி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கோவில் தனியார் நிறுவன மேலாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தென்ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் இவரது பேஸ்புக் பக்கத்திற்கு வந்த விளம்பர லிங்க் ஒன்றில், "குறைந்த முதலீட்டில் 200 சதவீதம் அதிக லாபம் பெறலாம்" என கவர்ச்சிகரமான விளம்பரம் வந்துள்ளது. ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் இதனை நம்பி அவர் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளனர். அக்குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலி தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய, அந்த பாதிக்கப்பட்ட மேலாளர் சிறுகச் சிறுக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். சைபர் கிரைம் பிரிவில் புகார் சில நாட்களுக்கு பிறகு லாபத் தொகை எதுவும் வராததால், தனது கணக்கிலிருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, பணம் எதுவும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். வாலிபர் கைது இந்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாகவும், வங்கி கணக்குகளைச் செயல்படுத்த உதவியாகவும் இருந்த ஏரல் அருகே பள்ளிப்பத்து பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். வடமாநில நபர்கள் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு மேலும் இந்த பண மோசடி வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-youth-arrested-for-defrauding-a-manager-working-in-congo-of-rs752-lakh




