சென்னை, திருமணம் ஆன பின்பும் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து ராஷ்மிகா பேட்டியில் பேசியுள்ளார். பல மொழிகளில் நடிக்கும் ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்', 'பீஷ்மா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் 'அனிமல்' படத்தில் நடித்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'மைசா', 'ரணபாலி', 'எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' உள்ளிட்ட படங்கள் அவரது கைவசம் உள்ளன. 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் இவர் சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியா நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-திருமணம் ஆன பின்பும் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்து கொண்ட போதிலும் என் பயணம் வழக்கம் போல் தொடர்கிறது. நானும் விஜய் தேவரகொண்டாவும் நண்பர்களாகி இப்போது ஜோடிகளாக இருக்கிறோம். விஜய் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர். தன் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பார். தொடர்ந்து படங்களில் நடிப்பதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-sleep-only-four-hours-a-day-actress-rashmika-in-an-interview




