புதுவை, புதுச்சேரியில் முதல் முறையாக தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை காலை ஆளுநர் உரையும், மதியம் பட்ஜெட் தாக்கலும் நடைபெற உள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 13-ந் தேதி பதவியேற்றார். பின்னர் 2 கட்டங்களாக அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5-ந் தேதி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே சபாநாயகர், துணை சபாநாயகர் தேர் தலை நடத்த கடந்த ஜூன் 24-ந் தேதி புதுவை சட்டச பையில் இருந்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப் பட்டது. அதில் ஜூலை 2-ந் தேதி சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது. தற்போது அந்த கோப்பு கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் அமைதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே புதுவை மாநிலத்திற்கான 2026-27-ம் ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 300 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவையில் வருகிற 31-ந் தேதியுடன் இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் முடிகிறது. அதற்கு முன்பாக சட்டசபை யில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் புதுவை சட்டசபை கூட்டத்தொடர் நாளை (திங்கட்கி ழமை) தொடங்கி நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-மந்திரி ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கவர்னர் உரை மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யும் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/budget-session-begins-tomorrow-with-governors-address-in-puducherry-assembly




