மும்பை, மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் டிட்வா கிராமத்தில் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதி இந்நிலையில், பள்ளி விடுதியில் இன்று மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்வபம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், மாணவர்கள் சாப்பிட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/40-tribal-students-hospitalised-after-dinner-at-school-in-maharashtra




