புதுடெல்லி, டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமரியில் காணொளி மூலம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். செப்டம்பர் 25 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. போதிய மழை இன்மை, அணைகளுக்கு நீர்வரத்து இல்லை உள்ளிட்ட காரணங்களை காட்டி, காவிரியில் நீர் திறக்க கர்நாடகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டுக்கான தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் குழு கூட்டத்தில் வலியுறுத்தியது. இறுதியில், தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/cauvery-water-management-authority-orders-the-release-of-4000-cusecs-of-water-to-tamil-nadu




