சென்னை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 378 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநிலம் முழுவதும் துரிதமான நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரகாலத்தில் 24.07.2026 முதல் 30.07.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 378 4 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 23 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல்போன பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,711 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10,320 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 9 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 62 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-resolution-of-378-complaints-within-a-single-week-through-the-singappenn-special-task-force




