சென்னை, தீரன் சின்னமலையின் 221-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ் மண்ணின் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அந்நிய ஆட்சியின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்த அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். மக்களின் உரிமைகளையும், சுயமரியாதையையும் காக்க போராடிய அவரது அசைக்க முடியாத மன உறுதியும், தாயகத்தின் மீது கொண்ட அளப்பரிய பற்றும், தலைமுறைகள் தோறும் விடுதலை உணர்வை விதைக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன. மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்; அவரது விடுதலைச் சிந்தனையும் வீர மரபும் தமிழர் நெஞ்சங்களில் என்றும் உயிர்ப்புடன் வாழும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/famous-hero-dheeran-chinnamalai-will-remain-forever-nainar-nagendran




