கே.ஆர்.எஸ். அணை காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர் அணை யும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணையும், ஹாசன் மாவட்டத் தில் ஹேமாவதி அணையும், குடகு மாவட்டத்தில் ஹாரங்கி அணையும் அமைந்துள்ளது.இதில் முக்கிய அணையாக கருதப்படுவது கே.ஆர்.எஸ். அணை தான். 124.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.55 அடியாக இருந்தது. அதாவது அணையில் 18.166 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் இருந் தது. அணையில் 49.452 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குடகு மாவட்டத்தில் மழை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10,504 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 3,258 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் அது நேற்று திடீ ரென அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் வினாடிக்கு 1,406 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி கொள் ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் நேற்று காலை 2,858.51 அடி தண் ணீர் இருந்தது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் நேற்று காலை 2,907 அடி தண்ணீர் இருந்தது. அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,277 அடி தண் ணீர் இருந்தது. குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை பெய்து வருவதால் மேற்கண்ட 3 அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமான அளவில் இருந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/inflow-increases-to-the-krs-dam-across-the-cauvery-river




