கொல்கத்தா, பாஜக, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ, நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், தயவு செய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறி விடுங்கள் என பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 2 ஆக உடைந்த கட்சி மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. 80 எம்எல்ஏக்களில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களுக்கே பாஜகவை சேர்ந்த சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 20க்கும் மேற்பட்டோர் விலகியது மம்தாவுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள், மம்தாவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான கோயல் மல்லிக் தனது மாநிலங்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். தயவு செய்து வெளியேறு விடுங்கள் இந்தநிலையில், இந்த சூழலில் பேஸ்புக் லைவில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- பாஜக, காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, சிஐடி உள்ளிட்டவற்றின் அழுத்தம் காரணமாகவோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவோ யாராவது கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், கைகூப்பி வேண்டுகிறேன், தயவுசெய்து ஜூலை 21க்கு முன்பே வெளியேறிவிடுங்கள். நாம் கட்டியெழுப்பிய கட்சியின் பெயரைக் கெடுக்க வேண்டாம். நீங்கள் தாராளமாக வெளியேறலாம், இதனால் எங்கள் கட்சி பலவீனமடையாது. யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்சியில் நீடிப்பவர்களே எங்களின் உண்மையான பலம். ஜூலை 21க்குப் பிறகு நாங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "1993, ஜூலை 21, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் கூட மிரட்டப்பட்டு பாஜகவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் போகலாம், ஆனால் அவர்களின் இதயம் எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/quit-before-july-21-mamata-tells-rebels




